வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
நாகையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிப்பாளையம்:
நாகையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம் என 2 நகராட்சிகள், திட்டச்சேரி, வேளாங்கண்ணி, கீழ்வேளூர், தலைஞாயிறு என 4 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது.
3 அடுக்கு பாதுகாப்பு
அனைத்து வாக்குச்சாவடிகளில் இருந்தும் நேற்று அதிகாலை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தையும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் ஒரு அறையில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இதை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
துப்பாக்கி ஏந்திய போலீசார்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர். அதே போல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிகளை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
12 மணி நேரத்திற்கு ஒரு குழு என்ற அடிப்படையில் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சுழற்சி அடிப்படையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கலெக்டர் ஆய்வு
இதை தவிர வளாகத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. போலீசாரும் 24 மணி நேரமும் வளாகத்தை சுற்றி ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இங்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
நாகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதை தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story