குமரியில் 8 இடங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை
குமரியில் நாளை 8 இடங்களில் வாக்கு எண்ணிக்ைக நடக்கிறது. இதையொட்டி வாக்குப்பதிவு எந்திரங்கள் அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
குமரியில் நாளை 8 இடங்களில் வாக்கு எண்ணிக்ைக நடக்கிறது. இதையொட்டி வாக்குப்பதிவு எந்திரங்கள் அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
குமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. நாகர்கோவில் மாநகராட்சி, கொல்லங்கோடு, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை ஆகிய 4 நகராட்சிகள், 51 பேரூராட்கிகள் என மொத்தம் 56 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இந்த தேர்தல் நடந்தது.
வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்குச்சாவடிகளில் இருந்து அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டது. அதாவது நாகர்கோவில் மாநகராட்சியின் 52 வார்டுகளில் 233 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு எந்திரங்கள் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
18 பாதுகாப்பு அறைகளில் வைப்பு
இந்த வாக்கு எண்ணும் மையத்துக்கு கடைசி வாக்குப்பதிவு எந்திரம் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வந்து சேர்ந்தது. அவற்றை எல்லாம் அங்குள்ள பாதுகாப்பு அறைகளில் வைத்து, பூட்டப்பட்டது. பின்னர் அந்த அறைக்கு மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் ‘சீல்’ வைத்தார். இதையடுத்து அந்த பாதுகாப்பு அறைகளுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
குளச்சல்
குளச்சல் நகராட்சியில் வாக்காளர்கள் பதிவு செய்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மண்டைக்காடு அருகே லட்சுமிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும், மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி, கல்லுக்கூட்டம், வெள்ளிமலை, நெய்யூர், ரீத்தாபுரம், திங்கள்நகர், இரணியல், கணபதிபுரம் ஆகிய 9 பேரூராட்சிகளில் வாக்காளர்கள் பதிவு செய்த வாக்குப்பதிவு எந்திரங்களும் லட்சுமிபுரம் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பிற பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரி, அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி, கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி, மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி, ஆற்றூர் உள்ள ஒரு தனியார் கல்லூரி, பத்மநாபபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் வைத்து பூட்டி, சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த 8 வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள 18 பாதுகாப்பு அறைகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
3 அடுக்கு பாதுகாப்பு
இந்த 8 மையங்களிலும் இரவை பகலாக்கும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருக்க குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் ஒரு துணை சூப்பிரண்டு தலைமையில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
8 மையங்களிலும் 8 துணை சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். மொத்தம் 750 போலீசார் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கூடுதலாக 400 போலீசார்
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது மேலும் கூடுதலாக 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறினார்.
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருடன், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களால் நியமிக்கப்பட்டவர்களும் பகல், இரவாக வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story