நாட்டறம்பள்ளி அருகே சாலை தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி


நாட்டறம்பள்ளி அருகே சாலை தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 20 Feb 2022 11:40 PM IST (Updated: 20 Feb 2022 11:40 PM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலை தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மனைவி கண் முன்னே தொழிலாளி பலியானார்.

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலை தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மனைவி கண் முன்னே தொழிலாளி பலியானார்.

தடுப்பு சுவர்மீது மோதி பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் அடுத்த அங்கிநாயக்கன்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சக்தி (வயது40), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுமதி (35). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.  சக்தி தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் மனைவி சுமதியை பின்னால் அமரவைத்துக்கொண்டு வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் மேம்பாலம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் இருவரும்  படுகாயம் அடைந்தனர். இதில் தலையில் படுகையமடைந்த சக்தி, மனைவி கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.

மனைவிக்கு சிகிச்சை 

இது குறித்து தகவலறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயமடைந்த சுமதியை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து நாட்டறம்பள்ளி போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story