குடியாத்தம் அருகே நிதி நிறுவன அதிபர் வீட்டில் 4 பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு
குடியாத்தம் அருகே நிதி நிறுவன அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை, ரூ.1½ லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
குடியாத்தம்
குடியாத்தம் அருகே நிதி நிறுவன அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை, ரூ.1½ லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
நகை- பணம் திருட்டு
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த காந்தி நகர் நியூபார்க் டவுன் பகுதியில் வசிப்பவர் ரமேஷ்குமார். நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த புதன்கிழமை இவரது உறவினர் கரூரில் இறந்துவிட்டதால் குடும்பத்துடன் வீட்டை பூட்டிக்கொண்டு கரூர் சென்று விட்டு நேற்று அதிகாலை குடியாத்தம் திரும்பினார்.
அப்போது ரமேஷ்குமார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது இரண்டு அறைகளின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த அலமாரிகளும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைத்திருந்த 4 பவுன் நகைகள் மற்றும் ரூ.1½ லட்சம் திருட்டு போயிருந்தது.
போலீஸ் விசாரணை
மர்ம நபர்கள் வீட்டின்பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. நகைகளை பாதுகாப்பு கருதி வங்கி லாக்கரில் வைத்திருந்ததால் நகைகள் தப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக ரமேஷ்குமார் குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் டவுன் போலீசார் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைாக்கப்பட்டு திருட்டு நடைபெற்ற வீட்டில் ரேகைகளை பதிவு செய்தனர். வேலூரில் இருந்து மோப்ப நாய் கொண்டுவரப்பட்டது. அது திருட்டு நடைபெற்ற வீட்டில் இருந்து மெயின் ரோடு வழியாக விநாயகபுரம் கூட் ரோடு பஸ் நிறுத்தம் வரை சென்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இந்த திருட்டு சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story