24 மணிநேர கண்காணிப்பு வளையத் திற்குள் வாக்குப்பதிவு எந்திரங்கள்


24 மணிநேர கண்காணிப்பு வளையத் திற்குள் வாக்குப்பதிவு எந்திரங்கள்
x
தினத்தந்தி 21 Feb 2022 12:19 AM IST (Updated: 21 Feb 2022 12:19 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 24 மணி நேர கண்காணிப்பு வளையத்திற்குள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 24 மணி நேர கண்காணிப்பு வளையத்திற்குள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.
வாக்குப்பதிவு
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரி, பரமக்குடி அழகப்பாக கலை அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. 
ராமநாதபுரம் நகராட்சி, ராமேசுவரம் நகராட்சி, கீழக்கரை நகராட்சி, மண்டபம் பேரூராட்சி, தொண்டி பேரூராட்சி மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட உள் ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை ராமநாதபுரம் அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரி யிலும், பரமக்குடி நகராட்சி, அபிராமம் பேரூராட்சி, முதுகுளத்தூர் பேரூராட்சி, கமுதி பேரூராட்சி, சாயல்குடி பேரூராட்சி உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்கு எண்ணிக்கை பரமக்குடி அழகப்பா பல்கலைகழக உறுப்பு கலை மற்றும் அறிவியியல் கல்லூரியிலும் நாளை (22-ந்தேதி) நடைபெற உள்ளது. 
வாக்கு எண்ணிக்கை
ராமநாதபுரம் நகராட்சி 5 சுற்றுகளும் 10 மேஜைகளும், கீழக்கரை நகராட்சி 2 சுற்றுகளும் 4 மேஜைகளும், ராமேசுவரம் நகராட்சி 3 சுற்றுகளும் 8 மேஜைகளும், மண்டபம் பேரூராட்சி 3 சுற்றுகளும் 8 மேஜைகளும், ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி 1 சுற்றுகளும் 4 மேஜைகளும், தொண்டி பேரூராட்சி 1 சுற்றுகளும் 4 மேஜைகளும், பரமக்குடி நகராட்சி 7 சுற்றுகளும் 10 மேஜைகளும், அபிராமம் பேரூராட்சி 1 சுற்றுகளும் 4 மேஜைகளும், கமுதி பேரூராட்சி 1 சுற்றுகளும் 1 மேஜைகளும், முதுகுளத்தூர் பேரூராட்சி 1 சுற்றுகளும் 4 மேஜைகளும், சாயல்குடி பேரூராட்சி 1 சுற்றுகளும் 4 மேஜைகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளன.
கண்காணிப்பு
 வாக்கு எண்ணும் பணியினை மேற்கொள்ள சுமார் 160 அலுவலர்களும், பணியாளர்களும் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாக பகுதிகள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை மூலம் 24 மணி நேர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் போலீசார் 24 மணி நேர சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். யாரும் உள்ளே செல்ல முடியாதவாறு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுழற்சிக்கு ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 558 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீவிர சோதனை 
இதுதவிர, வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கூடுதல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அந்த வழியாக சென்றுவர அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.

Next Story