பெண் விஷம் குடித்து தற்கொலை
மூலைக்கரைப்பட்டி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இட்டமொழி:
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கூந்தன்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நாராயணன் (வயது 42), விவசாயி. இவருக்கு மாரியம்மாள் (40) என்ற மனைவியும், 2 மகன்கள், 1 மகளும் உள்ளனர். மாரியம்மாள் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த மாரியம்மாள் கடந்த 7-ந் தேதி வீட்டில் விவசாயத்துக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரது கணவர் நாராயணன் மற்றும் அக்கம் பக்கத்தினர் மாரியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் காளியப்பன் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story