குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற மாணவனுக்கு பாராட்டு விழா


குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற மாணவனுக்கு பாராட்டு விழா
x
தினத்தந்தி 21 Feb 2022 12:58 AM IST (Updated: 21 Feb 2022 12:58 AM IST)
t-max-icont-min-icon

நேபாளத்தில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு விழா நடந்தது.

செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வரும் மாணவன் ஆத்திப். இவர் நேபாள நாட்டில் யூத் கேம் இண்டர்நேஷனல் குத்துச்சண்டை போட்டியில் பள்ளியின் சார்பில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கும், தான் படிக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்து சாதனை படைத்துள்ளார்.
தங்கப்பதக்கம் வென்ற மாணவன் ஆத்திப்புக்கு பள்ளியின் சார்பில்  வரவேற்பு அளிக்கப்பட்டு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கபீர் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமையாசிரியர் முருகேசன், உதவி தலைமையாசிரியர்கள் சமுத்திரக்கனி. சிவசுப்பிரமணியன், சுடர்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் சுதாகர் அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைத்தொடா்ந்து பள்ளியின் சார்பில் மாணவன் ஆத்திப்பிற்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினா்.
நிகழ்ச்சியில் உடற்கல்வி இயக்குனர்-தேசிய மாணவர் படை அலுவலர் அருள்தாஸ், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன், ஆசிரியர்-ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியா் சஞ்சய்காந்தி நன்றி கூறினார்.

Next Story