எந்திரங்கள் தட்டுப்பாட்டால் விவசாயிகள் அவதி


எந்திரங்கள் தட்டுப்பாட்டால் விவசாயிகள் அவதி
x
தினத்தந்தி 21 Feb 2022 1:02 AM IST (Updated: 21 Feb 2022 1:02 AM IST)
t-max-icont-min-icon

சேதுபாவாசத்திரத்தில் சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் அறுவடை எந்திரங்கள் தட்டுப்பாட்டால் விவசாயிகள் அவதியடைந்து வருகி்ன்றனர்.

சேதுபாவாசத்திரம்:
சேதுபாவாசத்திரத்தில் சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் அறுவடை எந்திரங்கள் தட்டுப்பாட்டால் விவசாயிகள் அவதியடைந்து வருகி்ன்றனர். 
சம்பா அறுவடை பணி 
மேட்டூர் அணை கடந்த ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டது. அணையில் போதுமான தண்ணீர் இருந்தும், சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளுக்கு 5 நாட்கள் வீதம் முறை வைத்து  தண்ணீர் வழங்கப்பட்டது. இதனால் நடவுபணிகளை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நடவு பணிகளையும், நேரடி விதைப்பிற்கு பக்குவமான பகுதிகளில் கடைமடை விவசாயிகள் நேரடி விதைப்பும் செய்தனர்.
இதனால் காலம்தாழ்த்தி சம்பா சாகுபடி செய்யப்பட்டது. தற்போது நேரடி விதைப்பு மற்றும் ஆழ்குழாய் கிணறு மூலம் செய்யப்பட்ட சம்பா அறுவடை பணிகள் எந்திரங்கள் மூலம்  தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
அறுவடை எந்திரங்கள் தட்டுப்பாடு
முடச்சிக்காடு, கழனிக்கோட்டை, பூக்கொல்லை, பெருமகளூர் போன்ற பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக அறுவடை பணிகளை எந்திரங்கள் மூலம் விவசாயிகள் தொடங்கி உள்ளனர். ஆனால் அறுவடை செய்வதற்கு எந்திரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பா அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.

Next Story