தென்காசியில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு


தென்காசியில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 21 Feb 2022 1:07 AM IST (Updated: 21 Feb 2022 1:07 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. கடையநல்லூர் நகராட்சிக்கு அங்குள்ள விஸ்டம் மெட்ரிக் பள்ளியிலும், புளியங்குடி நகராட்சி, ராயகிரி, சிவகிரி, வாசுதேவநல்லூர் ஆகிய பேரூராட்சிகளின் வாக்குகள் புளியங்குடி வீராசாமி செட்டியார் என்ஜினீயரிங் கல்லூரியிலும்  எண்ணப்படுகின்றன. 
சங்கரன்கோவில் கோமதி அம்பாள் மெட்ரிக் பள்ளியில் சங்கரன்கோவில் நகராட்சி, திருவேங்கடம் பேரூராட்சியில் பதிவான வாக்குகளும், செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செங்கோட்டை நகராட்சி, அச்சன்புதூர், குற்றாலம், இலஞ்சி, மேலகரம், பண்பொழி, எஸ்.புதூர், வடகரை கீழ்பிடாகை ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகிறது. 
தென்காசி ஐ.சி.ஐ. அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தென்காசி, சுரண்டை நகராட்சிகள், ஆய்க்குடி, சாம்பவர்வடகரை பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. அத்தியூத்து சர்தார் ராஜா என்ஜினீயரிங் கல்லூரியில் ஆலங்குளம், ஆழ்வார்குறிச்சி, கீழப்பாவூர், சுந்தரபாண்டியபுரம் ஆகிய பேரூராட்சிகளில் பதிவாக  வாக்குகள்    எண்ணப் படுகிறது. 

3 அடுக்கு பாதுகாப்பு
மேற்கண்ட 6 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நுழைவுவாயில் மற்றும் ஸ்டிராங் ரூம் எனப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை ஆகியவற்றில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மைய வளாகம், மையத்திற்கு வரும் வழி போன்ற அனைத்து பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தனித்தனியாக கண்காணிப்பு மற்றும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தம் மாவட்டத்தில் 603 கேமராக்கள் ஒரே நேரத்தில் செயல்படும் அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story