திம்பம் மலைப்பாதையில்லாரி பழுதாகி நின்றது; பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப்பாதை
தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. தமிழகம்-கர்நாடக மாநிலம் இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ள இந்த பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இரவு நேரத்தில் சாலையை கடக்கும் வனவிலங்குகள் வாகனத்தில் மோதி உயிரிழப்பதாக கூறி கடந்த 10-ந் தேதி முதல் மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் மலைப்பாதையில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
போக்குவரத்து பாதிப்பு
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து சேலத்துக்கு கிரானைட் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. மாலை 4 மணி அளவில் திம்பம் மலைப்பாதை 9-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது லாரி திடீரென பழுதாகி நின்றது.
இதனால் அந்த வழியாக சிறிய வாகனங்கள் மட்டும் சென்று வந்தன. மற்ற வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை. இதன் காரணமாக திம்பம் மலைப்பாதையில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதைத்தொடர்ந்து பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை அப்புறப்படுத்தும் பணி நடந்தது. இதனால் திம்பம் மலைப்பாதையில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story