பாய் நாற்றாங்கால் குறித்து செயல்முறை விளக்கம்
தஞ்சை அருகே பாய் நாற்றாங்கால் குறித்து செயல்முறை விளக்கம் நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் புன்னைநல்லூர் அருகே உள்ள மேலசித்தர்காடு கிராமத்தில் பயிற்சி பெற்று வருகிறார்கள். அதன்படி எந்திரம் கொண்டு நாற்று நடவு செய்வதற்கான பாய் நாற்றங்கால் தயாரிக்கும் முறை குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு மேற்கொண்டனர். கல்லூரி முதல்வர் வேலாயுதம் அறிவுரையின் பேரில், பாய் நாற்றங்கால் வளர்ப்பது மூலம் எந்திர நடவு எளிமையாக மேற்கொள்ள முடியும். நடவின் போது சிக்கல் ஏற்படாமல் எந்திரம் நன்றாக நடவு செய்யும் எனவும் மாணவர்கள், விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். இதில் பேராசிரியர்கள் சண்முகப்பிரியா, ராஜசேகர், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story