வீட்டில் பதுக்கிய 1,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


வீட்டில் பதுக்கிய 1,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 21 Feb 2022 1:46 AM IST (Updated: 21 Feb 2022 1:46 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் பதுக்கிய 1,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி:

திருச்சி ஸ்ரீரங்கம் திருவள்ளுவர் தெருவில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் ஆகியோர் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் நேற்று மதியம் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினார்கள்.
அப்போது அந்த வீட்டின் பின்புறம் தலா 50 கிலோ எடை கொண்ட 23 மூட்டைகளில் மொத்தம் 1,150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது, தெரியவந்தது. இதுதொடர்பாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த வீட்டில் இருந்த ராஜேந்திரன்(வயது 50) என்பவரை கைது செய்தனர். மேலும் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

Next Story