வாலிபருக்கு அரிவாள் வெட்டு
வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
காட்டுப்புத்தூர்:
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் சரவணகுமார்(வயது 30). இவருக்கும், காடுவெட்டியை சேர்ந்த பெரியதம்பிக்கும்(26) இடையே கடந்த பொங்கல் பண்டிகையின்போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பெரியதம்பியை சரவணகுமார் தாக்கியது தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சரவணகுமார் வீட்டில் இருந்தபோது அந்த வழியாக வந்த பெரியதம்பி மற்றும் ஒருவர் சேர்ந்து சரவணகுமாரை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். அதைக்கண்ட சரவணகுமார் அரிவாளை தடுத்தபோது சரவணகுமாரின் கையில் வெட்டு விழுந்தது. இதில் காயமடைந்த சரவணகுமார் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து அவர் காட்டுப்புத்தூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் பெரியதம்பி மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story