ஈரோடு மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் ஆர்வமாக ஓட்டுப்போட்ட வாக்காளர்கள்; மாநகராட்சியில் 61.91 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவு
ஈரோடு மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாக்காளர்கள் ஆர்வமாக ஓட்டுப்போட்டனர். மாநகராட்சியில் 61.91 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாக்காளர்கள் ஆர்வமாக ஓட்டுப்போட்டனர். மாநகராட்சியில் 61.91 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஈரோடு மாநகராட்சியில் 59 வார்டுகளுக்கும், பவானி மற்றும் சத்தி நகராட்சிகளில் தலா 27 வார்டுகள், கோபி நகராட்சியில் 30 வார்டுகள், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் 18 வார்டுகள் என 4 நகராட்சிகளில் மொத்தம் 102 வார்டுகளுக்கும் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. மேலும் 42 பேரூராட்சிகளில் உள்ள 608 வார்டுகள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 769 வார்டுகளுக்கு 1,219 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில், ஈரோடு மாநகராட்சியில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 546 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 24 ஆயிரத்து 138 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 42 பேரும் என மொத்தம் 4 லட்சத்து 39 ஆயிரத்து 726 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
வாக்காளர்கள்
மேலும் பவானி, கோபி, சத்தி, புஞ்சைபுளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளில் 61 ஆயிரத்து 786 ஆண் வாக்காளர்கள், 67 ஆயிரத்து 949 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலித்தனவர்கள் 12 பேர் என 1 லட்சத்து 29 ஆயிரத்து 747 பேரும், 42 பேரூராட்சிகளில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 408 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 5 ஆயிரத்து 142 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 16 பேர் என 3 லட்சத்து 95 ஆயிரத்து 566 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 4 லட்சத்து 67 ஆயிரத்து 740 ஆண் வாக்காளர்கள், 4 லட்சத்து 97 ஆயிரத்து 229 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 70 பேர் என மொத்தம் 9 லட்சத்து 65 ஆயிரத்து 39 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ளது.
70.73 சதவீத வாக்குகள் பதிவு
நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. முடிவில் ஈரோடு மாவட்டத்தில் 70.73 சதவீத வாக்குகள் பதிவானது. இதில், ஈரோடு மாநகராட்சியில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 249 வாக்காளர்களும், 4 நகராட்சிகளில் 96 ஆயிரத்து 195 வாக்காளர்களும், 42 பேரூராட்சிகளில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 139 வாக்காளர்களும் தங்களது வாக்கினை செலுத்தி இருந்தனர்.
அதன்படி, 42 பேரூராட்சிகளில் 79.42 சதவீத வாக்குகளும், பவானி, கோபி, சத்தி, புஞ்சை புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளில் 74.14 சதவீதமும், ஈரோடு மாநகராட்சியில் 61.91 சதவீதமும் வாக்குகள் பதிவானது. ஈரோடு மாநகராட்சி பகுதி மக்களை விட பேரூராட்சிகள், நகராட்சிகளில் அதிக அளவில் மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.
Related Tags :
Next Story