சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல முயன்றவர் கைது
சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு விமானம் சென்றது. முன்னதாக அதில் ெசல்ல வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது திரிபுரா மாநிலம் அகர்தாலா மாவட்ட முகவரியில் இந்திய பாஸ்போர்ட்டுடன் ரிஸ்வான்கான் (வயது 57) என்பவர் துபாய் செல்ல வந்தார். அவர் மீது சந்தேகம் கொண்ட குடியுரிமை அதிகாரிகள், அவரிடம் விசாரித்த போது வங்கதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்த ரிஸ்வான்கான், திரிபுராவில் தங்கி இருந்தார். பின்னர் ஏஜெண்டுகள் மூலம் போலி பாஸ்போர்ட் வாங்கி கொண்டு சென்னை வழியாக துபாய் செல்ல முயன்றது தெரிந்தது. ரிஸ்வான்கானின் விமான பயணத்தை ரத்து செய்த குடியுரிமை அதிகாரிகள், அவரை கைது செய்து மேல் விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story