கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசி பொங்கல் விழா
கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசி பொங்கல் விழா
திருப்பூர்,
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மாசி மாத பொங்கல் விழா கடந்த 15-ந் தேதி பூச்சாட்டுடன் தொடங்கி நடைெபற்று வருகிறது. நேற்று கும்பம், முளைப்பாரி, பால், தீர்த்த குட ஊர்வலத்துடன் கம்பம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அம்மன் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும்(புதன்கிழமை) பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு, கரட்டங்காடு, செரீப் காலனி, காமாட்சியம்மன் கோவில், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூவோடு(தீச்சட்டி) எடுத்து பக்தர்கள் ஊர்வலம் நடைபெறும். அதேபோல், நாளை மாவிளக்கு, பொங்கல் விழா சிறப்பாக நடைபெற உள்ளது. 24-ந்தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும், வருகிற 25-ந்தேதி பக்தர்களுக்கு சிறப்பு அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவையொட்டி அம்மன் தினமும் ஒரு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story