ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் தெப்ப உற்சவம்
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித் திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் விழாவில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. 9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. 10-ம் திருவிழாவான நேற்று தெப்ப உற்சவத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர், 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு திருமஞ்சனம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.
இரவு 7 மணிக்கு சுவாமி உற்சவர் பொலிந்து நின்ற பிரான் தாயார்களுடன் தெப்பத்தேரில் எழுந்தருளி, தெப்பத்தில் வலம் வந்து அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 11-ம் திருவிழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நம்மாழ்வார் தெப்பத்திருவிழாவும், நாளை தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story