ஆற்றில் மணல் அள்ளிய 4 பேர் கைது


ஆற்றில் மணல் அள்ளிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 21 Feb 2022 10:52 PM IST (Updated: 21 Feb 2022 10:52 PM IST)
t-max-icont-min-icon

கண்டமனூர் அருகே ஆற்றில் மணல் அள்ளிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடமலைக்குண்டு:
கண்டமனூர் அருகே துரைச்சாமிபுரம் மூலவைகை ஆற்றில் மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கடமலைக்குண்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 
அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு போலீசார் துரைச்சாமிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஆற்றில் மணல் அள்ளிய குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த சுப்புராஜ் (வயது 53), அலெக்ஸ்பாண்டி (38), ஆதன் (52), சோலைத்தேவன்பட்டியை சேர்ந்த அழகர்சாமி (45) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 
மேலும் அவர்களிடம் இருந்து 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story