ஊராட்சி தலைவரின் கணவரை கத்தியால் குத்தியவர் கைது
ஊராட்சி தலைவரின் கணவரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
கமுதி,
கமுதி அடுத்துள்ள பாப்பிரெட்டியாப்பட்டி ஊராட்சியின் தலைவர் திம்மக்காள். இவரது கணவர் சித்தையன் (வயது55). இவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது, அதே ஊரைச் சேர்ந்த செல்வசுப்பிரமணியன் (31) தனது மனை விக்கு வேலை வாங்கித் தராத நீ எதற்காக ஊராட்சித் தலைவராக இருக்கிறாய் என்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சித்தையன் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார். இதுகுறித்து சித்தையன் அளித்த புகாரின் பேரில் கமுதி போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் உத்தரவின்பேரில் பெருநாழி போலீசார் செல்வசுப்பிர மணியன் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
Related Tags :
Next Story