700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 22 Feb 2022 12:56 AM IST (Updated: 22 Feb 2022 12:56 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

களியக்காவிளை:
கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ரேஷன் அரிசி
விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி புரந்தரதாஸ், வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜகுமார் மற்றும் அதிகாரிகள் குழித்துறையில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கேரளாவை நோக்கி ஒரு சொகுசு கார் வேகமாக சென்றது. அந்த காரை அதிகாரிகள் நிறுத்த முயன்றனர். ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். உடனே அதிகாரிகள் தங்களது வாகனத்தில் காரை துரத்தி சென்றனர்.
கடத்த முயன்ற...
சிறிது தூரம் சென்றதும் டிரைவர் காரை நிறுத்தி விட்டு இறங்கி தப்பி ஓடினார்.  தொடர்ந்து காரை சோதனை செய்தபோது சிறு, சிறு மூட்டைகளில் 700 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அரிசியுடன் காரை பறிமுதல் செய்தனர். 
பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை காப்புக்காடு அரசு குடோனிலும், காரை விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story