அதிக அளவில் பூத்து குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்


அதிக அளவில் பூத்து குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்
x
தினத்தந்தி 22 Feb 2022 1:09 AM IST (Updated: 22 Feb 2022 1:09 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் பகுதியில் சூரியகாந்தி பூக்கள் அதிக அளவில் பூத்து குலுங்குகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஆலங்குளம்,
ஆலங்குளம் பகுதியில் சூரியகாந்தி பூக்கள் அதிக அளவில் பூத்து குலுங்குகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
சூரியகாந்தி சாகுபடி 
ஆலங்குளம், கொங்கன்குளம், கீழாண்மறைநாடு, குறுஞ் செவல், வலையபட்டி, புளியடிபட்டி, கோபாலபுரம், மேலாண்மறைநாடு, லட்சுமிபுரம், கல்லமநாயக்கர் பட்டி, காக்கிவாடன்பட்டி, எதிர் கோட்டை, உப்பு பட்டி, குண்டாயாயிருப்பு, முத்துசாமிபுரம், கண்டியாயும், எட்டக்காபட்டி, இ.டி.ரெட்டியபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  800 ஏக்கர் வரை சூரிய காந்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 
100 நாளில் மகசூல் கொடுக்கும் சூரிய காந்தி பயிரினை விவசாயிகள் ஆர்வமுடன் சாகுபடி செய்து வருகின்றனர்.  
விதை தட்டுப்பாடு 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- 
ஆலங்குளம் பகுதியில் எண்ணற்ற விவசாயிகள் சூரியகாந்தியை சாகுபடி செய்துள்ளோம். நாங்கள் ஆரம்பத்தில் விதை கிடைக்காமல் கஷ்டப்பட்டோம். பின்னர் ஒரு கிலோ விதை ரூ.1000-க்கு வாங்கி மகசூல் செய்தனர். எந்திரம் மூலம் விதை போட்டால் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ போதும், கையினால் போட்டால் 4 கிலோ வரை தேவைப்படும். 
ஒரு ஏக்கருக்கு ஒரு மூடை டி.ஏ.பி.உரமும், ஒரு மூடை பொட்டாஷ் உரமும். 25 கிலோ யூரியா உரமும் வைக்கப்படுகின்றது. சென்ற ஆண்டு மழையினால் பாதிக்கப்பட்டு ஒரு ஏக்கர் நிலத்தில் 2 குவிண்டால் மகசூல்தான் கிடைத்தது. 
விவசாயிகள் மகிழ்ச்சி 
இதனால் விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்தனர். இந்த ஆண்டு பூக்கள் நன்றாக மலர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். அத்துடன் ஒரு ஏக்கர் நிலத்தில் 5 குவிண்டால் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அதேபோல குவிண்டாலுக்கு ரூ.8 ஆயிரம் வரை கிடைக்கும் என எதிர்பார்ப்பில் காத்திருக்கிேறாம். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story