மூலைக்கரைப்பட்டி அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு சாவு


மூலைக்கரைப்பட்டி அருகே காதல் திருமணம் செய்த  வாலிபர் தூக்குப்போட்டு சாவு
x
தினத்தந்தி 22 Feb 2022 1:15 AM IST (Updated: 22 Feb 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வெல்டிங் தொழிலாளி
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்வாய் நாகல்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் எடிசன் (வயது 25). வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி சேர்மக்கனி (24). இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை உள்ளது.
கடந்த 17-ந்தேதி எடிசன் அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் மது அருந்தியதாகவும், அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் எடிசனை சிலர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு சாவு
உடனே எடிசனை மனைவி சேர்மக்கனி வீட்டுக்கு அழைத்து சென்று அறையில் பூட்டியதாகவும், அப்போது எடிசன் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிகிறது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சேர்மக்கனி கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் எடிசனை காப்பாற்றி சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று எடிசன் பரிதாபமாக இறந்தார்.
4 பேர் மீது வழக்கு
இதுகுறித்து சேர்மக்கனி மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
அதன்பேரில், எடிசனை அவதூறாக பேசி தற்கொலைக்கு தூண்டியதாக, அதே ஊரைச் சேர்ந்த செல்லத்துரை மகன் போஸ்கோ (32), இவருடைய தாயார் மிக்கேலம்மாள் (60), ஜேம்ஸ் மகன் அருள் மார்ஷலின் (35), இவருடைய மனைவி விமலா (34) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story