பாளையங்கோட்டை நுகர்பொருள் வாணிப கழகத்தை விவசாயிகள் முற்றுகையிட முயற்சி


பாளையங்கோட்டை நுகர்பொருள் வாணிப கழகத்தை விவசாயிகள் முற்றுகையிட முயற்சி
x
தினத்தந்தி 22 Feb 2022 1:29 AM IST (Updated: 22 Feb 2022 1:29 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை நுகர்பொருள் வாணிப கழகத்தை விவசாயிகள் முற்றுகையிட முயன்றனர்

நெல்லை:
நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி, பாளையங்கோட்டை நுகர்பொருள் வாணிப கழகத்தை விவசாயிகள் முற்றுகையிட முயன்றனர்.
முற்றுகையிட முயற்சி
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு நெல்லை மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமையில் விவசாயிகள் நேற்று முற்றுகையிட முயன்றனர்.
அவர்களிடம் பேச்சுவார்த்ைத நடத்திய அதிகாரிகள், கோரிக்கை மனு வழங்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் செந்தில்குமாரிடம் விவசாயிகள் மனு வழங்கினர்.
நெல் கொள்முதல்
அதில், ‘தென்காசி மாவட்டம் செங்கோட்டை, புளியரை பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் நெல் பயிரிட்டனர். தற்போது அறுவடை முடிந்து 40 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. எனவே செங்கோட்டை, புளியரை பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் திறந்து, நெல் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட முதுநிலை மண்டல மேலாளர் செந்தில்குமார் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் விதிமுறைகளின்படி உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்வதாகவும் கூறினார். பின்னர் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Next Story