ஹிஜாப் விஷயத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? - கர்நாடக ஐகோர்ட்டு கேள்வி
ஹிஜாப் விஷயத்தில் கர்நாடக அரசின் நிலைப்பாடு என்ன என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
பெங்களூரு:
7-வது நாளாக விசாரணை
உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர். இந்த நிலையில் ஹிஜாப் அணிய தடை விதித்து அக்கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. இதை கண்டித்து அந்த மாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்து மாணவர்களும் காவி துண்டு அணிந்து வகுப்புக்கு வந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. கடந்த 8-ந் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதற்கிடையே, முஸ்லிம் மாணவிகள், தங்களை ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராக அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியேர் அடங்கிய அமர்வு, மத அடையாள ஆடைகளை வகுப்பில் அணிய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் அந்த மனுக்கள் மீது நேற்று 7-வது நாளாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின்போது கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவதகி ஆஜராகி வாதிட்டார். விசாரணை தொடங்கியதும் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி பேசுகையில் கூறியதாவது:-
நிலைப்பாடு என்ன?
உங்களின் (அட்வகேட் ஜெனரல்) வாரத்தின் அடிப்படையில் சில விளக்கங்கள் தேவைப்படுகிறது. அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் ஹிஜாப்பை தடை செய்யவில்லை என்றும், அதற்கு எந்த கட்ப்பாடும் விதிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் நிர்ணயித்துள்ள சீருடையை அணிய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த விஷயங்களின் உங்களின் நிலைப்பாடு என்ன. கல்வி நிலையங்களில் ஹிஜாப்பை அனுமதிக்க முடியுமா?, முடியாதா? என்பதில் உங்களின் நிலைப்பாடு என்ன என்பதை கூறுங்கள்" என்றார்.
அதற்கு அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவதகி கூறுகையில், "முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவது அவசியமான மத நம்பிக்கை இல்லை. இது எங்களின் நிலைப்பாடு. அம்பேத்கார் நாடாளுமன்ற கூட்டத்தில் ஒரு முறை பேசுகையில், நாம் மத அடையாளங்களை கல்வி நிலையங்களுக்கு வெளியே வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். குடிமக்களின் அவசியமான மத நம்பிக்கைகளுக்கு அரசியல் சாசனத்தின் 25-வது பிரிவு பாதுகாப்பு அளிக்கிறது. அதன்படி அவர்கள் தாங்கள் விரும்பும் நம்பிக்கைகளை வழிபடலாம். கல்வி நிலையங்கள் ஹிஜாப்பை அனுமதித்தால், அதுபற்றி நேரம் வரும்போது அரசு தனது முடிவு எடுக்கும்" என்றார்.
Related Tags :
Next Story