‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும்-குழியுமான சாலை
ஈரோடு எல்லைமாரியம்மன் கோவிலில் இருந்து பவானி செல்லும் சாலை குண்டும்- குழியுமாக உள்ளது. இதனால் அந்த ரோட்டில் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் குண்டும்- குழியுமான சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், ஈரோடு.
போக்குவரத்து சீராகுமா?
ஈரோடு சத்தி ரோட்டில் வீரப்பன்சத்திரம் முதல் சித்தோடு வரை சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மிக குறுகலான சாலைகளில் பஸ்கள், பள்ளிக்கூட வாகனங்கள் எப்போதும் வேகமாக வருகின்றன. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே போக்குவரத்தை சீர் செய்ய போலீசாரை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.சந்திரசேகரன், சி.எஸ்.எஸ்.நகர், பெரிய சேமூர்.
குப்பை தொட்டி வேண்டும்
தாளவாடி ஊராட்சிக்கு உள்பட்ட தொட்டகாஜனூர் கிராமத்தில் இருந்து மெட்டல்வாடி செல்லும் ரோட்டில் அங்கன்வாடி மையம், சுகாதார நிலையம் உள்ளது. இந்த பகுதியில் சாலையோரம் குப்பை மலைபோல் கொட்டப்பட்டு கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே அங்கு குப்பை கொட்டுவதை தடுப்பதுடன், குப்பை தொட்டி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தொட்டகாஜனூர்.
ஆபத்தான பள்ளம்
ஈரோடு கொங்கம்பாளையம் நால்ரோட்டில் ஆபத்தான பள்ளம் உள்ளது. இதனால் அந்தப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது. மேலும் இதன் அருகில் பள்ளிக்கூடம் உள்ளதால் மாணவ- மாணவிகளும் விழுந்து விடுகிறார்கள். எனவே ஆபத்தான இந்த குழியை மூடநடவடிக்கை எடுக்கவேண்டும்.
தாமோதரன், ஈரோடு.
அடிப்படை வசதி தேவை
வேம்பத்தி முனியப்பம்பாளையம் காளியம்மன் கோவில் வீதியில் அடிப்படை தேவையான கான்கிரீட் ரோடு, தெரு விளக்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சாக்கடை வடிகால் வசதி போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. எனவே எங்கள் வீதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், முனியப்பம்பாளையம்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
ஆப்பக்கூடல் நால்ரோட்டில் இருந்து பவானி செல்லும் சாலையில் சாக்கடை கழிவுநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே அங்கு சாக்கடை கழிவுநீர் தேங்காமல் முறையாக செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஆப்பக்கூடல்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
ஆ.புதுப்பாளையம் செங்குட்டை பிரிவில் இருந்து அத்தாணி- பவானி சாலை சந்திப்பு வரை அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி டிஜிட்டல் நூலகம், கழிப்பிட வசதி, ரேஷன் கடை, சத்துணவு கூடம் போன்றவற்றை அமைக்கலாம். மேலும் செங்குட்டை பிரிவில் இருந்து பவானி- அத்தாணி சாலையை இரு வழிச்சாலையாக மாற்றித்தர வேண்டும்.
ஆப்பக்கூடல், பொதுமக்கள்.
-----------
Related Tags :
Next Story