திசையன்விளையில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்


திசையன்விளையில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2022 2:00 AM IST (Updated: 22 Feb 2022 2:00 AM IST)
t-max-icont-min-icon

தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்

திசையன்விளை:
திசையன்விளை பேரூராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்களாக களக்காட்டை சேர்ந்தவர்கள் தூய்மை பணி செய்து வருகிறார்கள். இந்த தூய்மை பணியாளர்கள் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
 8 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்க கூடாது, சம்பள பட்டுவாடாவில் உள்ள குறைபாடுகளை சரி செய்து, மாதம் தோறும் 10-ந் தேதிக்குள் வழங்க வேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து அவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள சம்பள பணத்தை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலையில் திசையன்விளை பேரூராட்சி அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. சங்க நெல்லை மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் இந்த தர்ணா போராட்டத்தை நடத்தினர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ், சுகாதார ஆய்வாளர் நவராஜ் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர்.

Next Story