அந்தியூர் அருகே அம்மன் கோவிலுக்குள் புகுந்த நாகப்பாம்பு; பக்தர்கள் பரவசம்


அந்தியூர் அருகே அம்மன் கோவிலுக்குள் புகுந்த நாகப்பாம்பு; பக்தர்கள் பரவசம்
x
தினத்தந்தி 21 Feb 2022 8:53 PM (Updated: 21 Feb 2022 8:53 PM)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே அம்மன் கோவிலுக்குள் புகுந்த நாகப்பாம்பால் பக்தா்கள் பரவசம் அடைந்தனா்.

அந்தியூர்
அந்தியூர் அருகே சேத்துனாம்பாளையத்தில் பழமையான பெரியாண்டிச்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.
கோவில் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவர் உள்ளார். இவர் நேற்று காலை 8 மணி அளவில் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது சாமி சிலைக்கு கீழே படிக்கட்டின் அருகே நாகப்பாம்பு ஒன்று சுருண்டு படுத்து கிடந்ததை பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பூஜை செய்யாமல் வெளியே சென்றார். பின்னர் இதுபற்றி அந்த பகுதி பொதுமக்களிடம் கூறினார். அதைத்தொடர்ந்து ஏராளமானோர் கோவிலில் திரண்டனர். பயபக்தியுடன் தூரத்தில் நின்று கும்பிட்டு்விட்டு சென்றனர். இரவு நீண்ட நேரம் நாகப்பாம்பு அந்த இடத்தை விட்டு செல்லாமல் அங்கேயே படுத்து கிடந்தது. பெரியாண்டிச்சி சிலை அருகே நாகப்பாம்பு நீண்ட நேரம் படுத்திருந்தது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. 

Next Story