தென்காசி மாவட்டத்தில் தேர்தல் களத்தில் 1,840 பேர்; வெற்றி பெறப்போவது யார்? இன்று 6 இடங்களில் வாக்கு எண்ணிக்கை
தென்காசி மாவட்டத்தில் 413 வார்டுகளுக்கு 1,840 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர்
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் 413 வார்டுகளுக்கு 1,840 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர். இன்று காலை 6 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
உள்ளாட்சி தேர்தல்
தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை மொத்தம் 6 மையங்களில் தொடங்குகிறது.
கடையநல்லூர் நகராட்சியில் 33 வார்டுகளுக்கு 176 பேரும், புளியங்குடி நகராட்சியில் 33 வார்டுகளுக்கு 170 பேரும், சங்கரன்கோவில் நகராட்சியில் 30 வார்டுகளுக்கு 156 பேரும், சுரண்டை நகராட்சியில் 27 வார்டுகளுக்கு 148 பேரும், செங்கோட்டை நகராட்சியில் 24 வார்டுகளுக்கு 68 பேரும், தென்காசி நகராட்சியில் 33 வார்டுகளுக்கு 187 பேரும், போட்டியிடுகின்றனர். மொத்தம் 6 நகராட்சிகளில் 180 வார்டுகளுக்கு 905 பேர் போட்டியிடுகின்றனர்.
பேரூராட்சிகள்
அச்சன்புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 74 பேரும், ஆலங்குளம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 61 பேரும், ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 47 பேரும், ஆய்க்குடி பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 66 பேரும், குற்றாலம் பேரூராட்சியில் 8 வார்டுகளுக்கு 18 பேரும், இலஞ்சி பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 60 பேரும், கீழப்பாவூர் பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கு 67 பேரும், மேலகரம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 71 பேரும், பண்பொழி பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 59 பேரும், புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 46 பேரும் போட்டியிடுகின்றனர்.
ராயகிரி பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 11 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 4 வார்டுகளுக்கு 8 பேரும், சாம்பவர்வடகரை பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 64 பேரும், சிவகிரி பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கு 95 பேரும் போட்டியிடுகின்றனர். சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 11 வார்டுகளுக்கு 32 பேர் போட்டியிடுகின்றனர்.
திருவேங்கடம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 13 வார்டுகளுக்கு 52 பேர் போட்டியிடுகின்றனர்.
வடகரை பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கு 86 பேர் போட்டியிடுகின்றனர். வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கு 8 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 10 வார்டுகளுக்கு 29 பேர் போட்டியிடுகின்றனர். ஆக மொத்தம் 233 வார்டுகளுக்கு 935 பேர் போட்டியிடுகின்றனர். நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மொத்தம் 413 வார்டுகளுக்கு 1,840 பேர் போட்டியிடுகின்றனர்.
Related Tags :
Next Story