கிணற்றில் தவறி விழுந்து பெண் சாவு


கிணற்றில் தவறி விழுந்து பெண் சாவு
x
தினத்தந்தி 22 Feb 2022 3:09 AM IST (Updated: 22 Feb 2022 3:09 AM IST)
t-max-icont-min-icon

கொட்டாம்பட்டி அருகே முருங்கை கீரை பறித்த போது கிணற்றில் தவறி விழுந்து பெண் பலியானார்.

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே உள்ள திருச்சுனையை சேர்ந்தவர் சின்னையா (வயது 66). இவர் தென்னந்தோப்பில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.இவருடைய மனைவி கல்யாணி (56). இருவரும் தோப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கல்யாணி கிணற்றின் அருகே உள்ள முருங்கை மரத்தில் கீரை பறித்துக்கொண்டிருந்தார். அப்போது கால் தவறி அவர் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கினார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் இது குறித்து கொட்டாம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீரில் மூழ்கிய கல்யாணியை பிணமாக மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.


Related Tags :
Next Story