அரசு பஸ் கண்டக்டரை கீழே தள்ளிய வடமாநில வாலிபர்கள் 4 பேர் கைது


அரசு பஸ் கண்டக்டரை கீழே தள்ளிய வடமாநில வாலிபர்கள் 4 பேர் கைது
x
தினத்தந்தி 22 Feb 2022 4:18 AM IST (Updated: 22 Feb 2022 4:18 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் கண்டக்டரை கீழே தள்ளிய வடமாநில வாலிபர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தை அடுத்துள்ள விஜயகோபால புரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில், பீகார் மாநிலம் முகில்யா கிராமத்தை சேர்ந்த கணேஷ்தாசின் மகன் அபிநந்தன் குமாரதாஸ்(வயது 23), பிஜிதாசின் மகன் ராஜேஷ்குமார்(22), சம்புவின் மகன் சோனுகுமார்(19), சியமல் தாசின் மகன் அமர்குமார்(22) ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் சொந்த வேலையாக சிறுவாச்சூர் சென்றுவிட்டு, பின்னர் பெரம்பலூரில் இருந்து திருப்பட்டூர் செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்தனர். அப்போது பஸ்சின் கண்டக்டர் ஆறுமுகம் டிக்கெட் எடுக்கக்கூறியபோது, அவர்கள் டிக்கெட் எடுக்காமல் அவரிடம் தகராறு செய்தனர். மேலும் அவர்கள், ஆறுமுகத்தை பஸ்சில் இருந்து கீழே தள்ளியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த ஆறுமுகம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிநந்தன் குமாரதாஸ் உள்ளிட்ட 4 ேபரையும் கைது செய்தனர். இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தெரிவித்தார்.

Next Story