கிருஷ்ணகிரியில் நகராட்சி,5 பேரூராட்சிகளை கைப்பற்றிய தி.மு.க.


கிருஷ்ணகிரியில் நகராட்சி,5 பேரூராட்சிகளை கைப்பற்றிய தி.மு.க.
x
தினத்தந்தி 22 Feb 2022 11:39 PM IST (Updated: 22 Feb 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில், நகராட்சி, 5 பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில், நகராட்சி, 5 பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது.
கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 19-ந் தேதி நடந்த உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று கிருஷ்ணகிரியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்பட்டன. இதில் பர்கூர், நாகோஜனஅள்ளி, ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம் ஆகிய பேரூராட்சிக்கான வாக்குகள் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டன. அந்த பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில், ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் பர்கூர், நாகோஜனஅள்ளி, ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம், தேன்கனிக்கோட்டை ஆகிய 5 பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. கெலமங்கலம் பேரூராட்சியில் மட்டும் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக வெற்றி பெறாததால் யாருக்கு தலைவர் பதவி கிடைக்கும் என்பதை சுயேச்சை கவுன்சிலர்களே முடிவு செய்ய உள்ளனர்.
கிருஷ்ணகிரி நகராட்சி (தி.மு.க. வெற்றி)
மொத்த வார்டுகள்-33
தி.மு.க.-22
காங்கிரஸ்-1
அ.தி.மு.க.-5
பா.ஜனதா-1
சுயேச்சை-4
தி.மு.க. கைப்பற்றிய 5 பேரூராட்சிகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 பேரூராட்சிகளில் 5 பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. கெலமங்கலம் பேரூராட்சியில் இழுபறி ஏற்பட்டு உள்ளது.
1.காவேரிப்பட்டணம்
மொத்த வார்டுகள்-15
 தி.மு.க.-10
அ.தி.மு.க.-5
2.பர்கூர்
மொத்த வார்டுகள்-15
தி.மு.க.-9
அ.தி.மு.க.-2
சுயேச்சை-4
3.ஊத்தங்கரை
மொத்தவார்டுகள்-15
தி.மு.க.-12
அ.தி.மு.க.-1
பா.ம.க.-1
சுயேச்சை-1
4.நாகோஜனஅள்ளி
மொத்த வார்டுகள்-15
தி.மு.க.-13
அ.தி.மு.க.-1
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-1
5.தேன்கனிக்கோட்டை
மொத்த வார்டுகள்-18
தி.மு.க.-13 (ஒரு வேட்பாளர் போட்டியின்றி தேர்வு)
அ.தி.மு.க.-1
இந்திய கம்யூனிஸ்டு-1
பா.ஜனதா-1
காங்கிரஸ்-1
சுயேச்சை-1
இழுபறியான கெலமங்கலம் பேரூராட்சி
மொத்த வார்டுகள்-15
அ.தி.மு.க.-5
தி.மு.க.-2
சுயேச்சை-6
இந்திய கம்யூனிஸ்டு-1
பா.ம.க.-1

Next Story