19 பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது
தேனி மாவட்டத்தில் 19 பேரூராட்சிகளை தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது. க.புதுப்பட்டி, பழனிசெட்டிபட்டியில் இழுபறி நீடிக்கிறது.
தேனி:
தேனி மாவட்டத்தில் 19 பேரூராட்சிகளை தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது. க.புதுப்பட்டி, பழனிசெட்டிபட்டியில் இழுபறி நீடிக்கிறது.
பேரூராட்சிகள்
தேனி மாவட்டத்தில் 22 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளில் மொத்தம் 336 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் 196 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 65 இடங்களிலும், அ.ம.மு.க. 10 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 5 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, பா.ஜ.க. தலா 4 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 2 இடத்திலும், காங்கிரஸ், ம.தி.மு.க. தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். சுயேச்சைகள் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 10, அ.தி.மு.க. 2, மற்றவை 3 வார்டுகளில் வெற்றிபெற்றது. ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 9, அ.தி.மு.க. 5, மற்றவை 4 இடங்களில் வெற்றிபெற்றது.. உத்தமபாளையம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 12, அ.தி.மு.க. 2, மற்றவை 4 இடங்களில் வெற்றிபெற்றது. ஓடைப்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 11, அ.தி.மு.க. 2, மற்றவை 2 இடங்களில் வெற்றிபெற்றது. காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 7, அ.தி.மு.க. 3, மற்றவை 5 இடங்களில் வெற்றிபெற்றது. குச்சனூர் பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளில் தி.மு.க. 11, மற்றவை ஒரு இடங்களில் வெற்றிபெற்றது. கெங்குவார்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 10, அ.தி.மு.க. 3, மற்றவை 2 இடங்களில் வெற்றிபெற்றது. கோம்பை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 12, மற்றவை 3 இடங்களில் வெற்றிபெற்றது.
தாமரைக்குளம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 8, அ.தி.மு.க. 2, மற்றவை 5 இடங்களில் வெற்றிபெற்றது. தென்கரை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 10, அ.தி.மு.க. 3, மற்றவை 2 இடங்களில் வெற்றிபெற்றது. தேவதானப்பட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 12, அ.தி.மு.க. 3 மற்றவை 3 இடங்களில் வெற்றிபெற்றது. தேவாரம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 10, அ.தி.மு.க. 3, மற்றவை 5 இடங்களில் வெற்றிபெற்றது.
தி.மு.க. தனிப்பெரும்பான்மை
பண்ணைப்புரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 9, அ.தி.மு.க. 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு இடத்தில் வெற்றிபெற்றது. பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 7, அ.ம.மு.க. 6, அ.தி.மு.க. 2 இடங்களில் வெற்றிபெற்றது. போ.மீனாட்சிபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் அ.தி.மு.க. 11, தி.மு.க. 4 இடங்களில் வெற்றிபெற்றது. க.புதுப்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 4, அ.தி.மு.க. 2, மற்றவை 8 இடங்களில் பெற்றிபெற்றது. பூதிப்புரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 9, அ.தி.மு.க. 3, மற்றவை 3 இடங்களில் வெற்றிபெற்றது. மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளில் தி.மு.க. 7, அ.தி.மு.க. 5 இடங்களில் வெற்றிபெற்றது. மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 10, அ.தி.மு.க. 3, மற்றவை 2 இடங்களில் வெற்றிபெற்றது. வடுகபட்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சுயேச்சைகள் 9, தி.மு.க. 4, அ.தி.மு.க. 1, விடுதலை சிறுத்தைகள் 1 இடங்களில் வெற்றிபெற்றது. வீரபாண்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 10, அ.தி.மு.க. 1, மற்றவை 4 இடங்களில் வெற்றிபெற்றது. ஹைவேவிஸ் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 10, அ.தி.மு.க. 4, மற்றவை 1 இடங்களில் வெற்றிபெற்றது.
மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளில் போ.மீனாட்சிபுரம் பேரூராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது. க.புதுப்பட்டி, பழனிசெட்டிபட்டி பேரூராட்சிகளில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதிலும் தலைவர் பதவியை பிடிக்க தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அந்த 2 பேரூராட்சிகளிலும் இழுபறி நீடிக்கிறது. மற்ற 19 பேரூராட்சிகளையும் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றி உள்ளது.
Related Tags :
Next Story