பரமக்குடி நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது
53 ஆண்டுகளுக்கு பிறகு பரமக்குடி நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
பரமக்குடி,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆரம்பத்தில் பஞ்சாயத்து போர்டாக இருந்தது. அதன் பிறகு 1964-ல் பரமக்குடி, எமனேசுவரம் பகுதிகள் இணைக்கப்பட்டு பரமக்குடி நகராட்சியாக உயர்த்தப்பட்டது. அதில் 1969-ல் நகராட்சியின் முதல் தி.மு.க. நகர்மன்றத் தலைவராக கே.ஏ. எஸ். அற்புதம் என்பவர் பதவி வகித்தார். அதன்பிறகு 1996-ல் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. தற்போது 53 ஆண்டுகளுக்கு பிறகு பரமக்குடி நகராட்சியை தி.மு.க. 19 வார்டுகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பிடித்துள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க. 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இது தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த வெற்றியை தி.மு.க தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். தி.மு.க. தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றதால் எவ்வித பிரச்சினையும் இன்றி தி.மு.க. நகர்மன்றத் தலைவர் பதவியை பிடிப்பது உறுதியாகி உள்ளது.
Related Tags :
Next Story