வாக்கு எண்ணும் மையத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரால் ஏற்பட்ட பரபரப்பு


வாக்கு எண்ணும் மையத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரால் ஏற்பட்ட பரபரப்பு
x
தினத்தந்தி 23 Feb 2022 1:31 AM IST (Updated: 23 Feb 2022 1:31 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் வாக்கு எண்ணும் மையத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை 
சிவகங்கை நகராட்சி 21-வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் அம்சத்ராணி என்பவர் போட்டியிட்டார். அவருக்கு வாக்கு எண்ணிக்கையில் 9 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதனால் கோபம் கொண்ட அவர் தனக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கும் என்றும், தன்னுடைய உறவினர் உள்பட ஏராளமானவர்கள் இருப்பதால் தன்னுடைய வாக்குகளை மாற்றி விட்டதாக கூறி வாக்கு எண்ணும் மையத்தில் சத்தம் போட்டார். 
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிவசாமி மற்றும் போலீசார் அவரை சமரசம் செய்து வாக்கு எண்ணும் இடத்திலிருந்து வெளியே அனுப்பி வைத்தனர்.


Next Story