நெல்லை: வக்கீல் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தி.மு.க. வட்ட செயலாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வக்கீல் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை:
பாளையங்கோட்டையில் தி.மு.க. வட்ட செயலாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வக்கீல் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கொலை
பாளையங்கோட்டை தெற்கு பஜார் யாதவர் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னுதாஸ் என்ற அபே மணி (வயது 38). தி.மு.க. வட்ட செயலாளரான இவர் கடந்த மாதம் 29-ந்் தேதி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, 12 பேரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டம்
இந்த நிலையில் கொலை வழக்கில் கைதான பாளையங்கோட்டையை சேர்ந்த வக்கீல் அருண் பிரவீன் (35), மாணிக்கம் (24), தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த பேச்சிமுத்து (27), ராஜபாளையத்தை சேர்ந்த கருப்பசாமி (25) ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடும்படி, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் துரைகுமாருக்கு, கிழக்கு துணை கமிஷனர் சுரேஷ்குமார், பாளையங்கோட்டை உதவி கமிஷனர் பாலச்சந்திரன் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.
போலீஸ் கமிஷனர் அதனை ஏற்று, அருண் பிரவீன் உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி, அருண் பிரவீன் உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகலை பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்தார்.
Related Tags :
Next Story