காய்கறி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
கொரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டதால் காய்கறி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டதால் காய்கறி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காய்கறி வியாபாரி
ஈரோடு வீரப்பன்சத்திரம் காவிரி நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மனைவி கமலா. இவர்களுக்கு மோகன்ராஜ் என்ற மகனும், மணிமேகலை என்ற மகளும் உள்ளனர். இதில் மணிமேகலை திருமணமாகி தேனியில் வசித்து வருகிறார். மனோகரன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் கமலா தனது மகன் மோகன்ராஜூடன் வசித்து வருகிறார்.
மோகன்ராஜ் சரக்கு ஆட்டோவில் காய்கறிகள் வியாபாரம் செய்து வந்தார். இதற்காக அவர் கடன் வாங்கி இருந்தார்.
தற்கொலை
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக சரியாக வியாபாரம் செய்ய முடியாமல் மோகன்ராஜ் சிரமப்பட்டார். இதனால் அவர் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மனவேதனையுடன் காணப்பட்டார்.
நேற்று முன்தினம் மாலை கமலா உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் மோகன்ராஜ் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மோகன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மோகன்ராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story