சின்னசேலம் பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது
சின்னசேலம் பேரூராட்சியில் 12 இடங்களை பிடித்து தி.மு.க. கைப்பற்றியது.
சின்னசேலம்,
சின்னசேலம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகளில் 21 ஆயிரத்து 90 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அ.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், பா.ம.க., நாம் தமிழர், தே.மு.தி.க., சுயேச்சைகள் என மொத்தம் 73 பேர் போட்டியிட்டனர்.
இதற்கான தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இதில் 16 ஆயிரத்து 158 வாக்குகள் பதிவானது.
தி.மு.க. கூட்டணி வெற்றி
வாக்கு எண்ணிக்கை சின்னசேலம் அருகே உள்ள மேலூர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 6 சுற்றுகளாக நடைபெற்றது. இதில் தி.மு.க. 10 இடங்களிலும், அ.தி.மு.க. 5 இடங்களிலும், காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா ஒரு இடங்களிலும் வெற்றிபெற்றன.
மொத்தமுள்ள 18 வார்டுகளில் 10 வார்டுகளை பிடித்து சின்னசேலம் பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
Related Tags :
Next Story