கள்ளக்குறிச்சி நகராட்சியை தி.மு.க. முதல் முறையாக கைப்பற்றியது


கள்ளக்குறிச்சி நகராட்சியை தி.மு.க. முதல் முறையாக கைப்பற்றியது
x
தினத்தந்தி 23 Feb 2022 2:45 AM IST (Updated: 23 Feb 2022 2:45 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி நகராட்சியில் 14 இடங்களை பிடித்து முதல் முறையாக தி.மு.க. கைப்பற்றியது.


கள்ளக்குறிச்சி 

கள்ளக்குறிச்சி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. 
இங்கு மொத்தம் 46 ஆயிரத்து 890 வாக்காளர்கள் உள்ளனர். இதில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் என 89 பேர் போட்டியிட்டனர்.


இதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இதில்  33 ஆயிரத்து 296 வாக்குகள் பதிவானது.

14 இடங்களில் வெற்றி

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பாரதி மகளிர் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 

இவற்றில் 14 வார்டுகளில் தி.மு.க.வும், 5 வார்டுகளில் அ.தி.மு.க.வும்  காங்கிரஸ், அ.ம.மு.க. தலா  ஒரு வார்டிலும்  வெற்றி பெற்றனர். 
மொத்தமுள்ள 21 வார்டுகளில் தி.மு.க. 14வார்டுகளில் வெற்றி பெற்றதால் கள்ளக்குறிச்சி நகராட்சியை தி.மு.க. தன் வசமாக்கி வெற்றி வாகை சூடியது.


முதல் முறையாக 

பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட கள்ளக்குறிச்சி நகராட்சியில் ஏற்கனவே அ.தி.மு.க. 2 முறை கைப்பற்றிய நிலையில் தற்போது முதல் முறையாக தி.மு.க. கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்குறிச்சி நகராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பட்டியல் விவரம் வருமாறு:-


1-வது வார்டு 
ரமேஷ்தி.மு.க1,087 
வெங்கடேசன் அ.தி.மு.க. 480 
மணிகண்டன் நாம் தமிழர் கட்சி 24

2-வது வார்டு 

சுப்புராயலு தி.மு.க. 1,069 
ஜெயக்குமார் அ.தி.மு.க. 346 
ஷேக்அப்துல் ரகுமான் எஸ்.டி.பி.ஐ. 46


3-வது வார்டு 
அஸ்வின் குமார் தி.மு.க. 746 
மோகன்அ.தி.மு.க. 456 
முகமது யாசின் ஆம் ஆத்மி கட்சி 275 
விஜயரங்கன் பா.ஜ.க. 24 
மணிக்குமார் நாம் தமிழர் கட்சி 27


4-வது வார்டு 
ஷமீம் பானு தி.மு.க.  1,567
தாராஅ.தி.மு.க. 217 


5-வது வார்டு 
யுவராணி தி.மு.க.843 
அம்முஅ.தி.மு.க. 734
மோகனப்பிரியா
(நாம் தமிழர் கட்சி 13)
ரியாஸ் பேகம் எஸ்.டி.பி.ஐ.71


6-வது வார்டு 
சீனிவாசன் தி.மு.க. 629 
ஜெய்முருகன் அ.தி.மு.க. 579
ஆறுமுகம் பா.ம.க. 17 
ராஜ்கோடி நாம்தமிழர் கட்சி 8


7-வது வார்டு 
மீனாட்சி தி.மு.க. 780 
பழனியம்மாள் அ.தி.மு.க. 435 
பிரீத்தி தே.மு.தி.க. 284 
நாகம்மாள் நாம் தமிழர் கட்சி 12 


 8-வது வார்டு 
விமலா தி.மு.க.1,094 
ராதாமணி அ.தி.மு.க. 393 
மேரி பா.ஜ.க.54 
புஷ்பா தே.மு.தி.க. 24
அசோதை சுயேச்சை 198 


 9-வது வார்டு 
பால்ராஜ் அ.ம.மு.க. 903
பச்சையாப்பிள்ளை
(விடுதலை சிறுத்தை கட்சி 569) சுரேஷ்குமார் அ.தி.மு.க. 173 
 சத்யா தே.மு.தி.க. 6 


10-வது வார்டு 
பாத்திமா தி.மு.க.945  
சுகந்தாஅ.தி.மு.க. 639 
சிவசக்தி பா.ம.க.30  
சூரியாபா.ஜ.க.36 
யாஸ்மின் நாம் தமிழர் கட்சி 14 


 11-வது வார்டு 
பாபுஅ.தி.மு.க. 611 
சர்புதீன் தி.மு.க.607 
நாராயணன் பா.ம.க. 12 


12-வது வார்டு 
சத்யா அ.தி.மு.க. 1,267 
மங்களா தி.மு.க. 1,149 
சவுந்தரி நாம் தமிழர் கட்சி 16 


13-வது வார்டு 
செல்வம் தி.மு.க. 847 
சத்யா அ.தி.மு.க. 320 
ராஜன்நாம் தமிழர் கட்சி 30 


14-வது வார்டு 
விஜயகுமாரி தி.மு.க. 980
விஜயசாந்தி அ.தி.மு.க. 356 


15-வது வார்டு 
தேவராஜ் காங்கிரஸ்
419 
சுரேஷ்அ.தி.மு.க. 400 
 சர்தார்சிங் பா.ஜ.க.180
ரவிச்சந்திரன் சுயேச்சை 187


16-வது வார்டு 
விமலா அ.தி.மு.க. 898 
சித்ரா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 63
அருளரசி பா.ஜ.க. 27 
சுமதி சுயேச்சை 418


17-வது வார்டு 
ஞானவேல் தி.மு.க.
1,136 
அருண்குமார் அ.தி.மு.க. 459
சூர்ய மகாலட்சுமி பா.ஜ.க. 86 


18-வது வார்டு 
சங்கீதாஅ.தி.மு.க. 584 
விஜயலட்சுமி தி.மு.க. 548 


 19-வது வார்டு 
முருகன் அ.தி.மு.க. 1,301 
சதீஷ்குமார் தி.மு.க. 1,049 
மணிமாறன் நாம் தமிழர் கட்சி 13


20-வது வார்டு 
உமாதி.மு.க. 1,387 
சுமதிஅ.தி.மு.க. 252 
மஞ்சுபா.ம.க. 39 


21-வது வார்டு 
சுமதிதி.மு.க. 925
ராதிகாஅ.தி.மு.க. 580 
அசோதை பா.ஜ.க. 44 
நாகம்மாள் நாம் தமிழர் கட்சி 14 

Next Story