மதுரை மாவட்டத்தில் 3 நகராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது
மதுரை மாவட்டத்தில் 3 நகராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது. 9 பேரூராட்சிகளில் 6 பேரூராட்சிகளை தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது. பரவை பேரூராட்சியை அ.தி.மு.க. வசமானது.
மதுரை,
மதுரை மாவட்டத்தில் 3 நகராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது. 9 பேரூராட்சிகளில் 6 பேரூராட்சிகளை தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது. பரவை பேரூராட்சியை அ.தி.மு.க. வசமானது.
நகராட்சி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக வார்டுகளில் வெற்றி பெற்று மதுரை மாநகராட்சி தி.மு.க. வசமானது. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர் ஆகிய 3 நகராட்சிகள் உள்ளன. இந்த 3 நகராட்சிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்று உள்ளன. திருமங்கலம் நகராட்சியை பொறுத்தவரை 27 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் 19 வார்டுகளில் வெற்றி பெற்றன. அ.தி.மு.க. 6 வார்டுகளிளும் தே.மு.தி.க. 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.
மேலூர் நகராட்சியில் 27 வார்டுகளில் தி.மு.க. 24 இடங்களையும், 2 இடங்களில் அ.தி.மு.க.வும், ஒரு வார்டில் அ.ம.மு.க.வும் வெற்றி பெற்று உள்ளன. உசிலம்பட்டி நகராட்சியில் 24 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 13 வார்டுகளிலும், அ.தி.மு.க. 9 வார்டுகளிலும் அ.ம.மு.க. 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.
பேரூராட்சிகள்
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை 9 பேரூராட்சிகளில் 6 பேரூராட்சியை தி.மு.க.வும், ஒரு பேரூராட்சியை அ.தி.மு.க.வும் கைப்பற்றி உள்ளன. பாலமேடு பேரூராட்சியை பொறுத்தவரை தலைவர் பதவியை சுயேச்சைகள் முடிவு செய்ய உள்ளனர். சோழவந்தான் பேரூராட்சியை பொறுத்தவரை எந்த கட்சி தலைவர் பதவி வகிப்பார்கள் என்பதை சுயேச்சைகள் முடிவு செய்கின்றார்கள்.
வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகளில். இதில் தி.மு.க. கூட்டணி 10 வார்டுகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 6 வார்டுகளில் வெற்றி பெற்றது. 2 வார்டுகளை சுயேச்ைச கைப்பற்றியது. வாடிப்பட்டி பேரூராட்சியை தி.மு.க. தக்க வைத்து கொண்டது.
பரவை பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 6 இடத்திலும் அ.தி.மு.க. 8 இடங்களிலும் சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. இந்த பேரூராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றியது.
அலங்காநல்லூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 11 இடத்திலும், அ.தி.மு.க. 1, சுயேச்சை 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.இந்த பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
பாலமேடு பேரூராட்சியில் 15 வார்டுகளில் போட்டியின்றி 7 பேர் தேர்வு பெற்றனர். அதன்பிறகு நடந்த தேர்தலில் சுயேச்சையாக 7 பேர் வெற்றி பெற்று உள்ளனர். தி.மு.க. ஒரு வார்டில் வெற்றி பெற்று உள்ளது. இங்கு பேரூராட்சி தலைவர் யார் என்பதை சுயேச்சைகள் முடிவு செய்வார்கள்.
அ.வெள்ளாளப்பட்டியில் 15 வார்டுகளில் தி.மு.க. 14, அ.தி.மு.க. 1 வார்டுகளிலும் வெற்றி பெற்றது.
சோழவந்தான் 18 வார்டுகளில் தி.மு.க. 8 வார்டுகளில், அ.தி.மு.க. 6 இடங்களிலும், அ.ம.மு.க.-1, சுயேச்சை 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.
பேரையூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 9 இடங்களில் தி.மு.க.வும், காங்கிரஸ் 5 இடங்களிலும், சுயேச்சை 1 இடத்திலும் வெற்றி பெற்று உள்ளன. டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 13 இடத்திலும், சி.பி.எம். 1 இடத்திலும், சுயே 1 இடத்திலும் வெற்றி பெற்றன.
எழுமலை பேரூராட்சியில் 18 வார்டுகளில் 12 வார்டுகளில் தி.மு.க.வும், 4 வார்டுகளில் அ.தி.மு.க.வும், 2 வார்டுகளில் அ.ம.மு.க.வும் வெற்றி பெற்று உள்ளது.
Related Tags :
Next Story