பள்ளிக்குச் செல்ல பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் மறியல்
பள்ளிக்குச் செல்ல பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே பெருமத்தூர் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் வேப்பூரிலுள்ள அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வருகின்றனர். தினமும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல பஸ் வசதி இல்லாததால், அருகில் உள்ள ஆண்டிகுரும்பலூர் கிராமம் வழியாக செல்லும் 4சி டவுன் பஸ்சில் தினந்தோறும் படிகட்டில் தொங்கியபடி சென்று வருகின்றனர். இந்நிலையில் அந்த பஸ்சை பெருமத்தூர் குடிக்காடு பிரிவு சாலையில் இருந்து ஊருக்கு உள்ளே வந்து ஆண்டிகுரும்பலூர் வழியாக செல்ல வேண்டும் எனவும், வாலிகண்டபுரம், கீழப்புலியூர், பெருமத்தூர் குடிக்காடு கிராம வழியாக வரும் 4பி டவுன் பஸ் வைத்தியநாதபுரம் வழியாக வேப்பூருக்கு செல்ல வேண்டும் எனவும், வேப்பூர் பள்ளி மற்றும் கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் செல்ல பெருமத்தூர் குடிக்காடு கிராமம் வழியாக கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் எனவும், பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியலால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story