மாரியம்மன் கோவில் திருவிழா முளைப்பாரி ஊர்வலம்


மாரியம்மன் கோவில் திருவிழா முளைப்பாரி ஊர்வலம்
x
தினத்தந்தி 23 Feb 2022 8:01 PM IST (Updated: 23 Feb 2022 8:01 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது

கயத்தாறு:
கயத்தாறில் தெற்கு தெருவில் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 8 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அன்று முதல் தினமும் காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. எட்டாம் நாள் அன்று மதியம் கொடைவிழாவும்,  மாலை 6 மணிக்கு சூரையாடல், கலை நிகழ்ச்சிகள் இரவு 10 மணிக்கு பொங்கலிடுதல் முடிகாணிக்கை,  காது குத்துதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
இரவு 12 மணிக்கு சாமக்கொடை, அதிகாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  முளைப்பாரி ஊர்வலம், பால்குடம் ஊர்வலம் நடந்தது. சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

Next Story