திமுக தொண்டர் கொலையில் அதிமுக வேட்பாளரின் கணவர் கைது
தி.மு.க. தொண்டா் ெகாலை வழக்கில் கேரளாவில் பதுங்கி இருந்த அ.தி.மு.க. வேட்பாளரின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
கூடலூர்
தி.மு.க. தொண்டா் கொலை வழக்கில் கேரளாவில் பதுங்கி இருந்த அ.தி.மு.க. வேட்பாளரின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
தி.மு.க. தொண்டர் கொலை
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி 10-ம் வார்டில் அ.தி.மு.க. பெண் வேட்பாளர் ஷிம்ஜித் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எமிபோல் வெற்றிபெற்றார்.
இதைத் தொடர்ந்து பேரூராட்சிக்குட்பட்ட கணியம்வயல் பகுதியில் தி.மு.க.வை சேர்ந்த சமீர், அஸ்கர் ஆகியோர் இரவு 7 மணிக்கு அ.தி.மு.க. வேட்பாளரை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஷிம்ஜித் கணவர் நவுஷாத் ஆத்திரமடைந்து சமீர் (வயது 46), அஸ்கர் (38) ஆகிய 2 பேரை கத்தியால் குத்தினார். இதில் சமீர் பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த அஸ்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் கைது
இது குறித்து தேவர்சோலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நவுஷாத்தை தேடி வந்தனர். இந்த நிலையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வழிக்கடவு பகுதியில் நவுஷாத் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த நவுஷாத்தை (வயது 45) கைது செய்தனர். பின்னர் அவரை கூடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக கைதான நவ்ஷாத் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:-
தோல்வி குறித்து கிண்டல்
வாக்கு எண்ணிக்கை அன்று தி.மு.க.வினர் வெற்றி ஊர்வலம் நடத்தினர். தொடர்ந்து தேர்தல் தோல்வி குறித்து எனது வீட்டு முன்பு வந்து கிண்டல் செய்தனர். இதனால் எனக்கும் தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் அப்பகுதி மக்கள் சமாதானம் செய்து வைத்தனர். ஆனால் அன்று இரவு 7 மணிக்கு தி.மு.க.வை சேர்ந்த சமீர் உள்ளிட்ட சிலர் மீண்டும் கிண்டல் செய்தனர். இதனால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தினேன். இதில் சமீர் உயிரிழந்தார் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story