நகை, பணத்துடன் மாயமான கணவரை கண்டுபிடித்து தரவேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனைவி மனு
நகை, பணத்துடன் மாயமான கணவரை கண்டுபிடித்து தரவேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனைவி மனு அளித்தார்.
பெருந்துறை அருகே உள்ள ஞானிபாளையம் பகுதியை சேர்ந்த இந்துமதி (வயது 42), ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
எனது கணவர் ஹரிபாபு பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எனது கணவர் திடீரென மாயமானார். அப்போது அவர் வீட்டில் இருந்த ரூ.30 ஆயிரம், 7 பவுன் நகை மற்றும் எனக்கு சொந்தமான 1,800 சதுர அடி நில பத்திரத்தையும் கொண்டு சென்றார். இன்றுவரை எனது கணவர் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எனது கணவரை கண்டுபிடித்து கொடுக்கவில்லை. எனவே மாயமான எனது கணவரை கண்டுபிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.
Related Tags :
Next Story