வீடுகள் கட்டும் பணி தொடக்கம்
மங்கைமடம் ஊராட்சியில் வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே மங்கைமடம் ஊராட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 62 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தற்போது வீடு கட்ட அளவிடும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை சீர்காழி ஊராட்சி ஒன்றிய பொறியாளர் கலையரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பயனாளிகளிடம் உடனடியாக கட்டுமான பொருட்களை கொள்முதல் செய்து வீடு கட்டும் பணிகளை தொடங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். வீடு கட்டும் பணிகள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஒன்றிய பொறியியல் துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றார். ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம், பணி மேற்பார்வையாளர் பிருந்தா, ஊராட்சி செயலர் அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story