வீரக்குமாரசாமி கோவிலில் நேற்று தேரில் கலசம் வைக்கும் நிகழ்ச்சி
வீரக்குமாரசாமி கோவிலில் நேற்று தேரில் கலசம் வைக்கும் நிகழ்ச்சி
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவிலில் நேற்று தேரில் கலசம் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வருகிற 2-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
வீரக்குமாரசாமி கோவில்
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள வீரக்குமாரசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகாசிவராத்திரியையொட்டி தேர்த்திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டு 139-ம் ஆண்டு மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த 14-ந்தேதி காலை 9 மணிக்கு தேர் முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்றுகாலை 9 மணிக்கு தேரில் கலசம் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேரோட்டம்
வருகிற 1-ந்தேதி காலை 10.30 மணிக்கு சாமி திருத்தேருக்கு எழுந்தருளச் செய்யப்படுகிறது. அன்று மாலை 4.30 மணி அளவில் பள்ளய பூஜை நடக்கிறது. இரவு 7 மணி அளவில் தேர் நிலை பெயர்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் 2-ந்தேதி மாலை 5 மணிக்கு தேரோட்டம், 3-ந்தேதி மாலை 5 மணிக்கு தேர் நிலை சேர்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் எஸ்.என்.முத்துக்குமார், முதன்மைதாரர்கள் நற்பணி மன்ற தலைவர் என்.டி.பாலசுப்பிரமணியம், முன்னாள் தக்கார் கே.கே.பழனிசாமி, அறங்காவலர்கள் பிரியா ராமசாமி, எஸ்.கே.குணசேகரன், மணி, குமாரசாமி, வி.பி.தங்கராஜ் உள்பட 11 குலத்தவர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் குலத்தவர்களும், அறநிலையத்துறையினரும் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story