போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
விழுப்புரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
விழுப்புரம்,
விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சந்திரன், சட்ட விளக்கவுரையாற்றினார். விழுப்புரம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ கலந்துகொண்டு போதைப்பொருள் ஒழிப்பு பற்றி மாணவ- மாணவிகளிடம் விளக்கவுரையாற்றினார்.
முகாமில் சிறப்பு சார்பு நீதிபதி பிரபாதாமஸ், மாஜிஸ்திரேட்டு அருண்குமார், அரசு வக்கீல் சுப்பிரமணியன், அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில், உதவி பேராசிரியர் பெமீனாசெல்வி, விழுப்புரம் கல்வி மாவட்ட அலுவலர் சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் முதன்மை சார்பு நீதிபதி விஜயகுமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story