திருமயத்தில் முறையாக வரி செலுத்தாத கடைக்கு ‘சீல்'


திருமயத்தில் முறையாக வரி செலுத்தாத கடைக்கு ‘சீல்
x
தினத்தந்தி 24 Feb 2022 12:07 AM IST (Updated: 24 Feb 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

முறையாக வரி செலுத்தாத கடைக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.

திருமயம்:
திருமயம் கடைவீதியில் ஊராட்சிக்கு சொந்தமான பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் ஊராட்சிக்கு வரிகள் செலுத்தி வருகின்றன. அதைப்போன்று ஊராட்சிக்கு சொந்தமான சுய உதவிக் குழு பெண்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட கட்டிடத்தில் பல்வேறு வகையான கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர். இதில் ஒரு கடைக்கு மட்டும் முறையாக வரி செலுத்தாத காரணத்தாலும், பலமுறை கேட்டும் வரி கட்டாததால் நேற்று ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. 

Next Story