மக்கள் நீதி மய்யத்தில் இருந்து கட்சியினர் விலகல்


மக்கள் நீதி மய்யத்தில் இருந்து கட்சியினர் விலகல்
x
தினத்தந்தி 24 Feb 2022 12:51 AM IST (Updated: 24 Feb 2022 12:51 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து கட்சியினர் விலகினர

பெரம்பலூர்
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் 9 பேர் கட்சி தலைமைக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், மக்கள் நீதி மய்யம் தொடங்கிய நாள் முதல் நிர்வாகிகள் திறம்பட செயல்பட்டோம். ஆனால், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் தோல்வி, கிராம ஊராட்சிகளில் தோல்வி, மாவட்ட ஊராட்சிகளில் தோல்வி தற்போது நகர்மன்ற தேர்தலிலும் ஏற்பட்ட தோல்விகள் மிகவும் கவலையளிக்கிறது. 
ஆகையால், மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும், கட்சியின் கட்டமைப்பு பதவிகளில் இருந்தும் விலகுகிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில் மக்கள் நீதி மய்யத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், நற்பணி இயக்க பெரம்பலூர் செயலாளர் சாதிக்பாஷா, கட்சியின் நகர செயலாளர் நாகராஜ் உள்பட 9 பேரும் கையெழுத்திட்டிருந்தனர்.


Next Story