வெங்காய அறுவடை பயிற்சி
ராஜபாளையம் அருகே வெங்காய அறுவடை குறித்த பயிற்சி நடைபெற்றது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே மேலராஜகுலராமன் கிராமத்தில் பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் வெங்காய பயிர் அறுவடை பரிசோதனை குறித்த பயிற்சி புள்ளியியல் துறை உதவி இயக்குனர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார புள்ளியியல் ஆய்வாளர் ஜெயந்தீஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் வேலுச்சாமி, தோட்டக்கலை காப்பீட்டு துறை அலுவலர் பரசுராமன், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பாலமுருகன், ஜெய்சங்கர், கார்த்திகேயன் மற்றும் கலசலிங்கம் பல்கலைகழக இறுதியாண்டு தோட்டக்கலை பயிலும் கல்லூரி மாணவிகள் கயல்விழி, முத்தமிழ்செல்வி, ஹரினி, அபிநாசி, கார்த்திகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story