குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் உள்ள காலனி தென்னமர பகுதியில் சுமார் 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அங்கு ஒரு வாரமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை, எனத் தெரிகிறது. இதை, கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் மங்கலம்- அவலூர்பேட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மங்கலம் போலீசார் விரைந்து வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்து, சீராக குடிநீர் வழங்கப்படும், என உறுதி அளித்தனர். அதன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு, 20 நிமிடம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story